நெல்லியடியில் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ். நெல்லியடியில் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். நெல்லியடியில் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். நெல்லியடிச் சந்திக்கு அருகாமையில் கடந்த வியாழக்கிழமை(19) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்தார்.

மேலும் அவருடன் இணைந்து பயணம் மேற்கொண்ட மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தலையில் படுகாயங்களுள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(23) இரவு உயிரிழந்துள்ளார்.

யாழ். கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த திருவம்பலம் கவிராஜ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவர். குறித்த இளைஞரின் உயிரிழப்பால் கரவெட்டிக் கிராமத்தையே சோகத்தில் ஆழத்தியுள்ளது.