முல்லைத்தீவு பகுதியில் மன்னார் மீனவர் ஒருவர் திடீர் மரணம்.

முல்லைத்தீவு - சாலை கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார், கள்ளிமுனைப் பகுதியை சேர்ந்த 33 வயதான எஸ். அருள்நேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மீனவர் நேற்று இரவு சாலைப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற சமயம் அவர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மீனவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.