களனி கங்கையில் இளம் தொலைக்காட்சி நடிகைக்கு நடந்த கொடூரம்!.!

களனி கங்கையில் நீராடச் சென்ற நிலையில், 27 வயதான ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்ததாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கண்டி உகுரெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த துஷானி டி சில்வா என்ற தொலைக்காட்சி நாடக துணை நடிகையே பலியானதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குடும்ப உறுப்பினர்களுடன் கிதுல்கல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற குறித்த நடிகை கினிகத்தேன களுகல யட்டிபெரிய பிரதேசத்தில் களனி கங்கையில் இன்று மதியம் நீராடியுள்ளார்.

நீரோட்டம் அதிகம் உள்ள பகுதியில் நீராடிய போது அதன் தாக்கத்தின் காரணமாக ஆற்று நீரால் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஆற்றின் நடுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அவருடன் வந்தவர்களும் பிரதேச வாசிகளும் கூக்குரலிட்டு எச்சரித்த போதும் அவர் அதனை கவனத்தில் கொள்ளாது சென்றுள்ளதாக விசாரணைகளி்ல் இருந்து தெரியவந்துள்ளது.

குடும்பத்தினரும், பிரதேசவாசிகளும் இணைந்து ஆற்று நீரில் அடித்துச்
செல்லப்பட்ட குறித்த பெண்ணை தேடிய நிலையில், அவரின் சடலம்
நீராடுவதற்கு இறங்கிய இடத்திலிருந்து சற்று தூரத்தில் களனி கங்கையில் மீட்கப்பட்டது.

அதன்பின்னர் அவரது சடலம் கிதுல்கல தெலிகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் ஆற்றில் நீராடுவதற்கு உகந்த பகுதி அல்லவென எச்சரிக்கை விடுத்து அறிவித்தல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த சுற்றுலா பயணத்தில் உயிரிழந்த பெண்ணின் தாயும், தந்தையும் சென்றிருந்ததுடன் இந்த பயணம் தொடர்பாக அவர்களுக்கிடையில் ஏற்கனவே கருத்து முரண்பாடு நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிங்கள தனியார் தொலைக்காட்சியொன்றில் ஔிபரப்பாகி வரும் ‘லவ் யூ பொஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் டெக்லா என்ற பெயரில் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

அத்துடன் ஏற்கனவே நடந்திருந்த சில தொடர்களும் எதிர்வரும் காலங்களில் வௌிவரவிருப்பதாக அவர் ஊடகமொன்றுக்கு அளித்திருந்த செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார்.

துஷானி டி சில்வா கதாபாத்திரமேற்று நடித்த சில தொலைக்காட்சித் தொடர்கள் – மொனர கிரில்லி, ஹிமஹங்சி, ரஜ தருவோ, அங்கல் சேம், தியனியே, அனந்தா, சப்தபாதி, ஸ்வர்ணபாலி ஆகியனவாகும்.

அத்துடன் நெதிபெரி டாசன், த்வித்வ, ரண்சயுர, சுமி போன்ற திரைப்படங்களிலிலும் அவர் துணை நடிகையாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.