உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

உயிருக்கு போராடிய சிறுத்தையை, மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று காப்பாற்றிய அதிகாரிகள்

உத்தரப்பிரதேசம் மாநிலம் மகாராஜ்கன்ஞ் மாவட்டத்தைச் சேர்ந்த வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன அதிகாரிகள் கண்டனர். உடனடியாக சிறுத்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என்பதால் வன அதிகாரிகள் தங்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். சிறுத்தை விழித்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்தும் அதிகாரிகள் வாகனத்தில் அழைத்து சென்றது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறுத்தை நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு நாட்களுக்கு பிறகு சிறுத்தை வனப்பகுதியில் விடப்படும். மேலும் சிறுத்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.