செல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்!!!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோயிலுக்குச் சென்று திரும்பியவர்களை வீதியில் நின்ற குழுவொன்று கோடரியால் வெட்டியதில், இருவர் காயமடைந்தனர்.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோயிலுக்குச் சென்று திரும்பியவர்களை வீதியில் நின்ற குழுவொன்று கோடரியால் வெட்டியதில், இருவர் காயமடைந்தனர். தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் மண்டான் சந்திப் பகுதியில் நேற்று இடம்பெற்றது.

மீசாலை வடக்கைச் சேர்ந்த சிறிதரன் சிறிப்பிரபு (வயது – 20), மந்துவில் கிழக்கைச் சேர்ந்த துரைமணி சயிந்தன் (வயது – 27) ஆகியோரே வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை, வவுனியாவில் இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் வாள்வெட்டில் முடிந்தது. அதில் சிக்கி இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வவுனியா சிதம்பரபுரத்தில் புதுவருடப்பிறப்பான நேற்று இடம்பெற்றது. இரண்டு இளைஞர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் காயமடைந்தவரின் தந்தையார் பின்னர் வாளால் வெட்டினார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதனால் ஒருவர் தலைப்பகுதியில் படுகாயமடைந்தார். மற்றொருவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவ்வளவுக்கும் காரணம் மதுபோதை என்று கூறப்படுகிறது.

ஆனால் விசாரணைகளின் பின்னரே மேலதிக விடயங்களைக் கூறமுடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 55 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை இடம்பெறுகிறது என்று சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.