உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் படிக்கச் சொன்னதால் மாணவன் தற்கொலை...

யாழ்ப்­பா­ணத்­தில் தங்­கி­யி­ருந்து கல்­வி­கற்ற வட்­டக்­கச்சி மாண­வன் வாந்­தி­யெ டுத்­த­தால் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போது உயி­ரி­ழந்­தார். சம்­ப­வம் நேற்று அதி­காலை இடம்­பெற்­றது.

வட்­டக்­கச்சி மகா வித்­தி­யா­ல­ யத்­தில் கற்ற தியா­கேஸ்­வ­ரன் நிலா­ப­வன் (வயது – 16) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

இவர் கடந்த டிசெம்­ப­ரில் ஜி.சி.ஈ. சாதா­ர­ண­த­ரப் பரீட்­சைக்­குத் தோற்­றிச் சிறந்த பெறு­பேறு பெற்­றுள்­ளார். அவர் கெட்­டிக்­கா­ரன் என்­ப­தால் உயர்­த­ரத்­தில் விஞ்­ஞான பிரி­வில் கல்­வி­யைத் தொட­ரும் நோக்­கில் யாழ்ப்­பாண நக­ரி­லுள்ள பிர­பல தனி­யார் கல்வி நிலை­யத்­தில் கடந்த 4 மாதங்­க­ளா­கக் உயர்­த­ரக் கற்­கையை மேற்­கொண்­டு­வந்­தார்.

அவர் நீர்­வே­லி­யி­லுள்ள தனது பெரி­யம்­மா­வின் வீட்­டில் தங்­கி­யி­ருந்தே கல்வி கற்று வரு­கி­றார். நேற்­று­முன்­தி­னம் மாலை அவ­ரது தாயார் அலை­பே­சி­யில் தொடர்­பு­ கொண்டு உயர்­த­ரக் கல்­வியை யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள பாட­சாலை ஒன்­றில் கற்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. யாழ்ப்­பா­ணத்­தில் பெரி­யம்­மா­வு­டன் தங்­கி­யி­ருந்து கற்­கை­யைத் தொட­ரு­மாறு கூறி­யுள்­ளார்.

அதற்கு மாண­வன் மறுத்­துள்­ளார். பின்­னர் தாம் குடும்­ப­மாக யாழ்ப்­பா­ணத்­தில் வந்து தங்­கி­யி­ருக்­கி­றோம். யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள பாட­சா­லை­யில்­தான் சேர்ந்து கல்வி கற்க வேண்­டும் என்று கூறி­யுள்­ள­னர். அதற்­கும் மாண­வன் சம்­ம­திக்­க­வில்லை. தான் வட்­டக்­கச்­சி­யில்­தான் உயர் கல்வி கற்­றப்­போ­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

அது பற்­றிய விட­யங்­கள் அலை­பே­சி­யில் பேசப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு 11.30 அள­வில் குறித்த மாண­வன் வாந்தி எடுத்­துள்­ளார். அவரை கோப்­பாய் மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்து மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றும்­போது அவர் உயி­ரி­ழந்­து­விட்­டமை பரி­சோ­த­னை­யில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அவர் ஒரு வகை நச்­சுத் திர­வத்தை அருந்தி உயி­ரிந்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­ய­வ­ரு­கி­றது. ஆனால் அது என்ன திர­வம் என்­பது உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வ­ர­வில்லை. அவர் அருந்­தி­யது என்­ன­பொ­ருள் என்­பது பற்றி ஆராய அவ­ரது உடற்­பா­கம் கொழும்­புக்கு அனுப்­பப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை நடத்­தி­னார்.