உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இனிமேல் நடிக்கவே முடியாதா? அரைநிர்வாண நடிகை மீது நடவடிக்கை

நடிகை ஸ்ரீரெட்டி சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர்கள் சங்கமான MAA அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தியது சர்ச்சையானது.

அதற்கு முன்பு அவர் ஒரு முன்னணி இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்நது சர்ச்சை ஏற்படுத்தியதால் நடிப்பதற்கான உரிமத்தை நடிகர் சங்கம் ரத்து செய்தது. அதற்காகத்தான் ஸ்ரீரெட்டி நிர்வாணமாக போராடினார்.

இந்நிலையில் நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊடங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ரெட்டி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர்மீது நாங்கள் துறை ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அவரின் அங்கீகார அட்டையை ரத்து செய்துள்ளோம். அவருடன் எங்கள் சங்கத்தை சேர்ந்த எந்த கலைஞரும் இனி நடிக்க மாட்டார்கள். அவ்வாறு நடித்தால் அவர்களும் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இனி ஸ்ரீரெட்டி எந்த படத்திலும் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.