கொழும்பில் பகுதியில் ஐந்து பேரை பலியெடுத்த சம்பவம்

ஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இறப்பர் தொழிற்சாலையொன்றின் முகாமையாளருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை தொழிற்சாலையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேகநபரை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.