உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வயதான தோற்றத்தை இயற்கையாக நீக்குவது எப்படி என்ற கவலையா?

வயதடைவது என்பது இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. வயதடையும் உடல் மட்டுமன்றி மனதளவிலும் மாற்றத்தை உணரலாம்.

மிகவும் விரைவாக வயதடைவதனால், மனதளவிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. சென்ற தலைமுறையை விட இன்றைய தலை முறையின் வயது முதிர்வு விரைவாக நடைபெறுகிறது என்பதே உண்மை.

கணனிக்கு முன்பு அதிக நேரத்தை செலவிடுவதனால், உடலிற்குத் தேவையான ஊட்டச்சத்தும், உடற்பயிற்சியின் மீதும் அக்கறை காட்டுவதில்லை. இதனால் சருமத்தில் அதிகளவான வயதான புள்ளிகள் ஏற்படுகிறது.

வயதான புள்ளிகள் உருவாவதற்கான காரணங்கள் மெலனின் அதிகளவில் உருவாகுவதனாலேயே. இவை 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் அதிகளவில் தோன்றினாலும், இளம் வயதினரும் இதனால் பாதிப்படைகின்றனர்.

வயதான புள்ளிகளை நீக்குவதற்கான சிறந்த தீர்வுகள்.

1. எலுமிச்சப்பழச் சாறு.
எலுமிச்சபழத்தில் உள்ள சிற்றிக் அமிலம் கலங்களை உடையச் செய்து, மேற் தேலை நீக்கி புதிய தோலை வளரச் செய்கிறது.

இதில் இயற்கையில் வெண்மையாக்கும் தன்மை கொண்டுள்ளது. எலுமிச்சப்பழச் சாற்றை வயதான புள்ளிகளின் மீது தடவி, உலர வைத்த பின்பு, நீரினால் கழுவவும்.

இந்த சிகிச்சை செய்யும் போது சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்வது அவசிய.


2. ஆப்பிள் சிடர் விநாகிரி.
தினமும் ஒரு பகுதி ஆப்பிள் சிடர் விநாகிரியுடன், இரண்டு பகுதி தேனைக் கலந்து முகம் முழுவதும் பூசவும், வயதான புள்ளிகள் உள்ள இடத்தில் அதிகமாக பூசுவதனால் சருமத்தில் வேறுபாட்டை பார்க்க முடியும்.

3. ஆமணக்கு எண்ணெய்.
வயதான புள்ளிகளை குணப்படுத்துவதற்கு ஆமணக்கு எண்ணெய்யில் உள்ள ஆண்டிஒக்ஸிடன் உதவுகிறது.
தினமும் ஆமணக்கு எண்ணெய்யை முகத்தில் தடவி, சில மணி நேரங்களின் பின்பு முகத்தைக் கழுவுவதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்


4. பால்.
பாலில் உள்ள lactic அமிலம் இறந்த கலங்களை நீக்குவதுடன் சருமம் சிவந்து போவதையும், சுருங்குவதையும் தடுக்கிறது. அத்துடன் சருமத்தை ஈரலிப்பாக வைத்திருக்கவும் உதவும்.


5. தக்காளிச் சாறு.
தக்காளிச்சாறு எலுமிச்சப்பழச்சாற்றை போன்றே செயற்படுகிறது. ஆனால் இதில் சிட்டிக் அமிலம் குறைவான அளவிலேயே உள்ளது.

தக்காளியை வெட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, உலர்ந்த பின்பு குளிரான நீரினால் கழுவவும். தினமும் இதனை செய்வதனால் வயதான புள்ளிகள் அகன்று விடும்.

6. விட்டமின் ஈ எண்ணெய்.
விட்டமின் ஈ எண்ணெய்யினால் புள்ளிகளை நீக்கி சருமத்தின் நிறத்தினை மாற்றும் தன்மையும் உள்ளது.

இதனை பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வருவதனால் சிறந்த பலனைப் பெற முடியும். ஆனால் வெடிப்புள்ள சருமத்தின் மீது பூசுவதை தவிர்க்க வேண்டும்.


7. மஞ்சள்.
மஞ்சள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் சருமத்தின் நிறத்தினையும் மாற்றும் சக்தி உள்ளது.