விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டு உள்ளது.[post_ads]

வவுனியா விசேட போலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டுகள் 22 , அருள் எறிகணைகள் 34,  உட்பட  மைக்ரோ பிஸ்டல் ரவைகள் 3000 , கைக்குண்டுகள் 34 , மிதிவெடிகள் 48 , ஆர்.பி.ஜி. குண்டுகள் 07 , இ.ஜி.பி.எம்.ஜி. ரவைகள் 2000 , விமான எதிர்ப்பு குண்டுகள் 1710 , கிளைமோர்கள் 04 , சி.04 வகை வெடிமருந்து 48 கிலோ என்பன மீட்கப்பட்டு உள்ளன.