Trending News...

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் ;நிர்வாண நிலையில் தாயைக் கைவிட்ட இரண்டு பிள்ளைகள்

வயோதிப பெண்ணொருவர் யாருடைய கவனிப்பும் இன்றி பாழடைந்த வீடொன்றில் தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்பிலிபிட்டி கும்பகொடஹார பகுதியில் உள்ள வீடொன்றில் 63 அகவையுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயாரான வயோதிப பெண்ணொருவர் நிர்வாணமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் மூத்த சகோதரர் அவரை அழைத்து வந்து அவருடைய சொத்துக்களை பறித்துக் கொண்டதாகவும், மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி இவ்வாறு தனிமையில் விடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிவாசிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை குறித்த வயோதிப பெண்ணின் மூத்த மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மகள் வெல்லவாய பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வயோதிப பெண்ணிற்கு அயலில் இருக்கும் பெண் ஒருவர் உணவளித்து வருவதாக கூறப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் எவ்வித பாதுகாப்பும் இன்றி தனிமையில் உள்ளார். பிள்ளைகளும் கண்டுகொள்ளாத நிலை இருப்பதாகவே தெரிகிறது.

மேலும் குறித்த வயோதிப பெண்ணின் விடயத்தில் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காத நிலை காணப்படுகிறது என அப்பகுதிவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.