Trending News...

நாளைய தமிழகம் விஜய்யின் கையில்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் படங்கள் மூலம் வசூல் வேட்டை அள்ளுபவர் விஜய். அண்மையில் அவரின் நடிப்பில் வெளியான மெர்சல் ரூ 250 கோடி வசூலை அள்ளியது.

அவருக்கு மிக அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது ரசிகர்கள் அறிந்த விசயம். இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22 ல் வருகிறது.

இதற்காக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் நாளைய முதல்வரே என தமிழக சட்டமன்ற புகைப்படத்துடன் பெரியளவில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

இதுபற்றி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். நான் நேசிப்பது போல ரசிகர்களும் விஜய்யை நேசிக்கிறார்கள். அவர் மீது ரசிகர்கள் வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடு தான் இது.

ரஜினிக்கும் இதுபோல ரசிகர்கள் செய்துள்ளார்கள் என அவர் கூறினார்.