Trending News...

கூலித்தொழிலாளி குடும்பத்தை கருவறுத்த நுண்கடன்!! முடிவுதான் என்ன??

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நுண்கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

செங்கல்வாடியில் கூலிக்கு கல்அறுக்கும் மாவடிவேம்பு சம்பர் வீதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மேகராசா யோகராசா (வயது 26) என்பவர் ஏற்கனவே 3 நிறுவனங்களில் நுண்கடன் பெற்றநிலையில் மற்றுமொரு நுண்கடனை பெற கூட்டாக மூன்றுபேர் சேர்ந்தால்தான் கடன் கொடுப்பதாக தெரிவித்ததால் தனது மனைவியை கட்டாயப்படுத்த அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் நேற்று மாலை தூக்கிட்டு பெறுமதிமிக்க உயிரைமாய்த்துள்ளார்.

ஏற்கனவே இவர் கூலித்தொழிலாளியாக இருந்து மாதம்  36 ஆயிரம்ரூபா கடனாக நிறுவனங்களுக்கு செலுத்தி வருகின்றார். இந்நிலையில் நிரந்தர வருமானமற்ற இவர் போன்ற ஏழைகளிற்கு ஆசை வார்த்தைகளை காட்டி கடன் பெற தேசிய அடையாளஅட்டை பிறப்பு சான்றிதழ் பிரதிகள் மற்றும் மூன்றுபேர் ஒருமித்த நிலையில் ஒப்பமிட்டால் நுண்கடன் வழங்கப்படுகின்றது.

இதில் சிந்திக்க வேண்டிய விடயம் ஒன்று நுண்கடன் வழங்குவதற்கு இதுவரை பெறுபவர்களுக்கு பிணையாளிகளாக இரு அரசஉத்தியோகத்தர்களை எதிர்பார்த்தார்கள் ஆனால் நடந்ததோ??? பல அரசஉத்தியோகத்தர்கள் பிணையாளியாய் போய் கடைசில் தன்னுடைய மாதசம்பளத்தை இழந்து நீதிமன்றம் வரை அலைந்ததால் அவற்றை கருத்தில் கொண்டு கடன்பெறுபவருக்கு பிணையாளியாக அரச உத்தியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை.

இதனால் நுண்கடன் நிறுவனங்களின் மாயவலையில் விழும் அப்பாவிகள் குறைவடைய பணத்திற்காக பிணத்தை பெறும் நிறுவனங்கள் சட்டதிட்டத்தை மிகவும் குறைத்து ஒவ்வொருவரிடம் எளிதாக கைவசம் கிடைக்கூடிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திர பிரதிகளையும் வாங்கி கடனை உடனடியாக கொடுக்கின்றார்கள்.இதனால் கடன் பெறும் எமது தமிழ்கிராம ஏழைகள் நிறுவனங்களை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது.