யாழ். சிறுமி படுகொலை! சந்தேகநபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

யாழ். சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் ஒருவர் மனநோயாளியைப் போல நடிப்பதாகவும், ஆனால் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை கொலை செய்த பின்னர், அவளது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்ததாகவும், தோடுகளைத் திருடுவதற்காகவே அவளைக் கொலை செய்ததாகவும் அந்த சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தான் மட்டுமே இந்தக் கொலையைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி றெஜினா நேற்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரை நேற்று பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், இன்று காலை மேலும் இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மேலும் குறித்த 6 சந்தேகநபர்களிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்காக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளதுடன், போராட்டங்களும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.