Trending News...

மரணவீட்டால் திரும்பிய இளைஞர்களிற்கு நேர்ந்த விபரீதம்!! நடுவீதியிலே பலியான சோகம்- படங்கள்

தம்புள்ளை – கலேவெல வீதியின் புவக்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றும் மற்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் கலேவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது முச்சக்கரவண்டியினுள் சாரதி உட்பட 4 பேர் பயணித்துள்ளனர்.

இவர்களில் கலேவெல யடிகல்பொத்த பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுகளையுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.