Trending News...

பதுளையில் அதிகாலை மூன்று பெண்கள் தீயில் கருகி பலி! Share

பதுளை, பசறை நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால், குறித்த வியாபார நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியதோடு, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர் என்று பசறை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்கள் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் தாய், சிறிய தாய் (சித்தி), தங்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கே.பீ.மல்லிகா (62), கே.பீ.சித்ரா (61), டி.எச்.கல்பனா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.