கொழும்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இளம் யுவதி.

கொழும்பின் பல பிரதேசங்களில் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்லேவெல பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சந்தேக நபரிடமிருந்து 4 லெட்டொப், 4 கையடக்க தொலைபேசி மற்றும் தங்க நகைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயதான பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்த யுவதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி நிட்டம்புவ, கிரிபத்கொட, மீரிகம ஆகிய பிரதேசங்களில் மதிய நேரத்தில் திருட்டியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.