யாழில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடி தப்பிய வாள்வெட்டு குழு- படங்கள்
இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்டு வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது
கொக்குவில் பகுதியில் நேற்று (30) மாலை இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அண்மையில் வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல், அங்கு ஹயஸ் வாகனத்துக்கு தீவைத்துடன், அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தித் தப்பித்தது.
இந்த வன்முறையை அரங்கேற்றிவிட்டுத் தப்பித்த கும்பலின் மோட்டார் சைக்கிளாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வீதியில் விபத்து ஏற்பட்டதும் மோட்டார் சைக்கிளை கைவிட்டுத் தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவித்தன.