Trending News...

யாழில் சரமாரி வாள்வெட்டு தாக்குதல்கள்.

வாள்வெட்டுக் காயங்களுடன் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையத்துக்குள் முகங்களை மூடிக்கட்டிக் கொண்டு நுழைந்த குழுவினர் குறித்த நபரை வாளால் வெட்டியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் கைதடி வடக்கில் நேற்றிரவு நடைபெற்றுள்ளது.

உப தபால் கந்தோருக்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருவர் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளனர். அந்த இடத்துக்கு திடீரென 8 பேர் கொண்ட குழு உந்துருளிகளில் வந்துள்ளது.

4 பேர் வீதியில் சென்று கொண்டிருந்தவர்களை மறித்துத் தாக்கியுள்ளனர். 4 பேர் கடைக்குள் புகுந்து பொருள்களை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, கடையின் உரிமையாளரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இதேவேளை, 119 அவசர இலக்கத்தின் ஊடாக அங்கு நின்றவர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் மானிப்பாயிலிருந்து அரியாலை வரையில் இருந்த பல கடைகளில், முகங்களை மூடிக்கட்டிக் கொண்டு புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தி பணத்தைக் கொள்ளையடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.