இலங்கை கடலில் பெருந்தொகைத் தங்கம்! எங்கே என தெரியுமா...?

புத்தளம் கற்பிட்டிக் கடலில் வைத்து பெருந்தொகையான தங்கம் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை குறித்த கடற்பரப்பில் பிரசன்னமான படகு ஒன்றில் வந்தவர்களிடமிருந்தே இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் அளவு ஐந்து கிலோ எழுநூறு கிராம் என கணிக்கப்பட்டுள்ளதுடன் இதன் இலங்கைப் பெறுமது சுமார் நாற்பது மில்லியன் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை தங்கத்துடன் வந்தவர்கள் இருவரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.