Trending News...

வவுனியாவில் தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட சோகம்

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் கிணற்றில் தவறி விழுந்து காயமடைந்த தாயும், மகளும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக மகள் ( 17) சென்றிருந்த சமயத்தில் அவர் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.

இதனை அவதானித்த தாயார் (வயது 48) மகளை காப்பாற்ற போராடிய சமயத்தில் அவரும் கிணற்றினுள் விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் இருவரினதும் குரல் கேட்ட அயலவர்கள் விரைந்து செயற்பட்டு கிணற்றினுள் காயங்களுடன் இருந்த தாயையும், மகளையும் மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இருவரின் உடல் நிலைமையும் தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.