Trending News...

போலிஸ் அனுசரணையில் பாரிய விபச்சார விடுதி கொழும்பில் பிடிபட்டது

கொழும்பு, களனியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட பாரிய விபச்சார விடுதியை சுற்றிவளைக்க சென்ற பொலிஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய சுற்றி வளைப்பிற்கு சென்ற பொலிஸார் அதிகாரிகள் 15 யுவதிகளை கைது செய்துள்ளனர். எனினும் உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தரவுக்கு அமைய அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

களனி டயர் சந்தி பிரதேசத்தில் 24 மணித்தியாலங்கள் முழுவதும் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட உத்தரவிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய பொலிஸ் மா அதிபர் ஒருவர் உத்தரவிற்கமைய சுற்றிவளைப்பை நிறுத்துமாறு குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய கைது செய்யப்பட்ட பெண்கள் அவ்விடத்திலேயே விடுவிக்ககப்பட்டுள்ளனர்.

இந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் கொழும்பு மற்றும் ததாசன்ன பிரதேசத்தில் 30க்கும் அதிகமான மசாஜ் நிலையங்களை நடத்தி செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.