மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமி: திடுக்கிடும் பின்னணி

கென்யாவில் பத்து வயது சிறுமி ஒருவரை அவர் பெற்றோரே மூன்று ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வரும் நிலையில் பரிங்கோ கவுண்டியை சேர்ந்த சிறுமி ஒருவர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக அங்கு கால்நடைக்கு பதிலாக பெண்களை பரிமாற்றம் செய்து கொள்வது அதிகளவில் நடைமுறையில் உள்ளது.

குறித்த சிறுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது முதல் திருமணம் நடந்துள்ளது. சிறுமியால் கர்ப்பமாக முடியாததால் அவர் கணவர் அடித்து உதைத்துள்ளார்.

இதனால் அங்கிருந்து தப்பி பெற்றோரிடம் சிறுமி தஞ்சம் அடைந்தார். ஆனால் பெற்றோர் சிறுமிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.

இதையடுத்து சிறுமியின் வயிறு வீங்கிய நிலையில் அவர் கர்ப்பமானதாக அனைவரும் நினைத்தனர்.

பின்னர் தான் சிறுமி Visceral leishmaniasis என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதன் காரணமாக அவரின் மண்ணீரல் விரிவடைந்து அவர் வயிறு வீங்கியுள்ளது. இதன்பின்னர் மீண்டும் வேறு நபருக்கு சிறுமி திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கொடுமையை அனுபவித்த வந்த சிறுமியை சமீபத்தில் தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர்.

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.