ரயில் மோதியதில் 18 வயது மாணவி ஒருவர் பரிதாபமாக பலி!

அம்பலாங்கொடை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை நகரிலுள்ள தனியார் வகுப்பொன்றிலிருந்து உணவு இடைவேளைக்காக குறித்த மாணவி ரயில் பாதையூடாக நடந்துசென்ற போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அளுத்கமயிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்ட மாணவி படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை தொபன்வில பகுதியை சேர்ந்த 18 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். அம்லாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.