(படங்கள்) சாரதிகளின் கவனயீனம்... பௌத்த மதகுருமார், பாடசாலை மாணவர்கள் உட்பட 26 பேர் காயம்.
கண்டி – யாழ்பாணம் ஏ-9 வீதியில் மாத்தலைப் பிரதேசத்தில் இடம் பெற்ற பஸ் விபத்தில்
26 பேர் காயமடைந்துள்ளனர்.(31.7.2108)
தலவாகலையிலிருந்து தம்புல்லை நோக்கிச் சென்ற தனியார் பஸ்வண்டியுடன், தம்புல்லைப் பிரதேசத்திலிருந்து மாத்தலை நோக்கி வந்த இ.போ.ச. பஸ்வண்டியும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் 26 பேர் காயமடைந்து, மாத்தளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேரும், பௌத்த மதகுருமார் இருவரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரு பஸ் வண்டிகளதும் சாரதிகள் கடுங் காயத்திற்குள்ளாகி உள்ளதாகப் பொலீசார் தெரிவித்தனர்.
சாரதிகளின் கவனயீனமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொலீசார் தெரிவித்தனர்.