Trending News...

4 ரியூசன் ஆசிரியர்களுடன் உயர்தர வகுப்பு மாணவி செய்த காரியம்!!

பிபில பிரசேத்தில் அமைந்துள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியின் கைத் தொலைபேசியில் இருந்த நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி பாலியல் லஞ்சம் கோரிய ஆசிரியர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.

பிபில பிரதேசத்தில் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர் மற்றும் சில நபர்கள் குறித்த பாடசாலை மாணவியுடன் இமோ மற்றும் வைபர் ஊடாக தமது நிர்வாண புகைப்படங்களை பரிமாறியுள்ளனர்.

இந்த நிலையில், மொனராகல பிரிவு பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்ல அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி, இது தொடர்பான விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.

மாணவி மற்றும் ஆசிரியரது பெற்றோர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து நீண்ட நேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக்குப் பின் சந்தேக நபரான குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், குறித்த ஆசிரியர் தனது கைத்தொலைபேசியை ஹெக் செய்து தனது புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாகவும் அவற்றை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக மிரட்டி பாலியல் லஞ்சம் கோரியதாக குறித்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,2016ம் ஆண்டிலிருந்து குறித்த மணவி நான்கு ரியுசன் ஆசிரியர்களுடன் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.