பெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்!

பெற்றோரால் பட்டினி போடப்பட்ட சிறுவனொருவரின் படம் உலகையே உலுக்கியுள்ளது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவனொருவரின் படமே இவ்வாறு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலடிக் மொல்சென்கோ என்ற குறித்த சிறுவன் அவனது வீட்டில் வைத்து சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில், சிறுவனின் பெற்றோர் வீட்டுக்குள் சமூக ஆர்வலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், நீதிமன்ற உத்தரவுடன், பொலிஸாரை அழைத்துக் கொண்டு சில சமூக ஆர்வலர்கள் சிறுவனின் வீட்டுக்குள் நுழைந்து அவனை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டபோது சிறுவன் வெறும் 7 கிலோ கிராம் எடையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கிருந்த உணவுத்தட்டைக் பார்த்ததும் சிறுவன் மகிழ்ச்சியில் கத்தியதாகவும், அவர் அந்தளவு பசியில் இருந்ததாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவருக்கு மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சையளித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள அவரது பெற்றோர், விலடிக் குழந்தையாக இருக்கும் போது உள்ளூர் மருத்துவமனையில் அவரை வைத்து பரிசோதனை செய்ததாகவும், இதுவே அவரது நிலைக்கு காரணமெனவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் பெற்றோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.