Trending News...

பஸ் - முச்சக்கரவண்டி விபத்து. மாணவன் உயிரிழப்பு.

வவுனியா புதூர் பகுதயில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் ஒருவன் பலியானதுடன்
 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வவுனியா புதூர் பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தொன்றில் பாடசாலை மாணவன் ஒருவன் பலியானதுடன் 8 பேர் படு காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து முன்புறமாக சென்றுகொண்டிருந்த முற்சக்கரவண்டியுடன் மோதுண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக முற்சக்கரவண்டியில் பயணித்த புளியங்குளம் இந்துக்கல்லூரி மாணவன் ஒருவன் பலியானதுடன் முற்சக்கரவண்டி சாரதி உட்பட அதில் பயணித்த 8 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக புளியங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


இவ்விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.