குளித்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு இரு இளைஞர்கள் செய்யப்போன விபரீதம்

வவுனியா பறன்நட்டகல் பகுதியில் நேற்று முன்தினம் குடும்ப பெண் மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட இருவரை வவுனியா ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பறன்நட்டகல்லில் நேற்று முன்தினம் இரவு 28 வயதுடைய குடும்பப் பெண் குளித்துக்கொண்டு இருக்கும் போது இரு இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளனர்.

இருந்த போதும் அப்பெண் அவர்களைத் தள்ளிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து வீடு திரும்பிய தன் கணவனிடம் தெரிவித்ததை அடுத்து வவுனியா ஒமந்தை பொலிஸில் இத் துஸ்பிரயோக முயற்சி தொடர்பாக முறைப்பாட்டினை செய்துள்ளனர்.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை ஒமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.