யாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது !!

ஆனைக்கோட்டையில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவரின் கார் தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனைக்கோட்டை கூழவடியைச் சேர்ந்த மருத்துவர் சந்திரபாலன் (வயது-65) என்பவருடைய காரே இவ்வாறு திடீரெனத் தீப்பிடித்து சேதமடைந்தது.

மருத்துவர் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். தனது துணைவியை வைத்தியசாலைக்குச் சென்று பார்விட்டு வீடு திரும்பிய அவர், காரை வீட்டின் முன்னாள் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

காரிலிருந்து வயர் எரிந்த நாற்றம் வீசுவதாக அவரது பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பில் சென்று பார்த்த போது, காரில் தீப்பிடித்தமை தெரிய வந்தது. சம்பவம் தொடர்பில் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் கார் முழுவதும் தீ பரவியுள்ளது. தீணணைப்புப் பிரிவினர் தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கார் மோசமாகச் சேதமைந்தது.

காரின் மின்னோட்ட வயர்களில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாகவே கார் தீப்பற்றியிருக்கும் என்று தெரிவிக்கும் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகக் கூறினர்.