வீதியில் சென்ற பெண்ணை மோதிய மோட்டார் சைக்கிளால் இருவர் பலி

அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த பெண்ணும் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியில் பெலவத்த பகுதியில் நேற்று (16) இரவு இந்த விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் மாதம்பை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 31 வயதுடைய ஜெயமஹாமுதலிகே டொன் கசுன் வீரசிங்க மற்றும் மாதம்பை, கல்யாணி வத்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட 73 வயதான மஹமரகலகே​ ஜோசபின் நோனா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.