யாழில் இரவு நடந்த கொடூரம்..

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறைப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரை நகர் பகுதியிலேயே இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 56 வயதான நடராஜா தேவராஜா என்பவர் மிகமோசமான காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று இரவு லொறி ஒன்றில் வந்த மூன்றுபேர் அடங்கிய குழுவினரே இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாகக் குறிப்பிடும் பொலிஸார் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் தாம் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.