மாப்பிளை செய்த திருவிளையாடல்!! மணமகளால் நிறுத்தப்பட்டது கலியாணம்!! யாழில் சம்பவம்!!

கல்யாண நாளில் மாப்பிள்ளை குடிபோதையில் மயங்கிக் கிடந்ததால் மணப்பெண் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று கடந்த மாதம் யாழில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

கடந்த மாதம் 20-ம் திகதி யாழில் வசித்து வந்த பெண்ணுக்கும், மன்னாரை சேர்ந்த ஆணுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணம் யாழிலுள்ள பெண் வீட்டில் இடம்பெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை யாழிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

திட்டமிட்டபடி 20-ம் திகதி காலை குறித்த பெண் திருமணத்துக்கு தாயாராகியிருந்த நிலையில், வெகு நேரமாகியும் மாப்பிள்ளை திருமணத்துக்கு வரவில்லை, தொலைபேசி அழைப்புக்கும் பதிலில்லை, என்ன நடந்திருக்குமோ என்ற பதற்றத்தில் பெண்ணின் உறவினர்கள் விடுதிக்கு சென்று பார்த்த பொழுது அவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

மாப்பிள்ளை மது போதையில் மயங்கிக்கிடந்தார், எழுப்பியும் எழும்பவில்லை, வேறுவழியின்றி மீண்டும் பெண்வீட்டுக்கு சென்ற உறவினர்கள் நடந்த சம்பவத்தை பெண்ணுக்கும், பெண் வீட்டாருக்கும் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் சிறிது நேரத்தின் பின் திருமணத்தை நிறுத்துமாறு பெற்றோரிடம் கூற பெண்ணின் விருப்பப்படி திருமணம் நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் திருமணத்துக்கு சென்ற உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.