அதி வேகத்தால் விபரீதம்!! மின் கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்!இருவர் வைத்திய சாலையில்- படங்கள்

வவுனியா – குருமன்காட்டில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காட்டிலிருந்து, புளியங்குளம் நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் குருமன்காடு, காளி கோயில் வீதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பமொன்றுடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார்சைக்கிளில் சென்ற இருவரும் சிறுகாயங்களுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்கம்பத்துடன் மோதிய மோட்டார்சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.