Trending News...

மஞ்சள் கோட்டு கடவையில் சென்ற நபரை மோதித் தள்ளிய தனியார் பஸ்

மட்டக்களப்பு – திருப்பெருந்துறை சந்தியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து திருப்பெருந்துறை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

திருப்பெருந்துறை சந்தியில் உள்ள மஞ்சள் கடவையினை கடக்க முயன்றவர் மீது தனியார் பஸ் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது

இதில் இருதயபுரம் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய சகாயநாதன் என்ற நபரே படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தினை தொடர்ந்து அங்கு நின்ற பொது மக்கள் குறித்த தனியார் பஸ் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நிலமையினை கட்டுப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மஞ்சள் கடவை ஊடாக துவிச்சக்கர வண்டியை உறுட்டிக்கொண்டு கடக்க முற்பட்டவர் மீது வேகமாக வந்த தனியார் பஸ் மோதியதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரின் நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் தனியார் பஸ் சாரதியை கைது செய்ததோடு, குறித்த நபரின் பஸ்ஸூம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.