தேனிலவின்போது கொல்லப்பட்ட மனைவி… புது காதலருடன் வலம் வரும் பிரித்தானியர்: அதிர்ச்சியில் குடும்பம்

தென்னாப்பிரிக்காவில் தேனிலவை கொண்டாட சென்ற இடத்தில் மனைவியை துப்பாக்கி குண்டுகளுக்கு பறிகொடுத்த பிரித்தானிய தொழிலதிபர் தமது புது காதலருடன் வலம்வரும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய தொழிலதிபரான ஷ்ரீன் தேவானி கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்வீடன் வாழ் Anni என்பவரை இந்து கலாச்சார முறைப்படி இந்தியாவின் மும்பை மாநகரில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அதே ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தேனிலைவை கொண்டாடி வந்த தம்பதியை மர்ம கும்பல் ஒன்று தாக்கி ஆனியை மட்டும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளது.

இதில் சம்பவயிடத்திலேயே ஆனி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தேவானி குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தாம் ஓரினசேர்க்கையில் நாட்டம் கொண்டவர் என அவர் முதன் முறையாக வெளிப்படுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பில் தெரியவந்த ஆனியின் உறவினர்கள், இதே தகவலை அவர் திருமணத்திற்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக தங்களது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்க மாட்டோம் எனவும், அவர் எங்கள் மகளை கொலை செய்யவில்லை என்றே நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என தேவானி விடுவிக்கப்பட்டு நீண்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், தமது புதிய ஆண் காதலருடன் முதன் முறையாக வெளிவந்திருக்கிறார் அவர்.

மட்டுமின்றி ஆனியை திருமணம் செய்து கொண்ட அதே மும்பை நகரில் தமது காதலருடன் தேவானி விடுமுறையை கழித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் திருமணத்திற்கு முன்னரும் ஆண் பாலியல் தொழிலாளர்களுடன் தேவானிக்கு தொடர்பு இருந்தது எனவும்,

மனைவி கொலையான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் தம்மை சிக்கவைக்கும் பொய்யர்கள் எனவும் தேவானி பகிரங்கமாக புகார் தெரிவித்திருந்தார்.

அந்த மூவரும் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியங்களை மறுத்துள்ள தேவானி, சம்பவத்தன்று தாங்கள் சென்றுள்ள வாகனத்தை வழி மறித்த கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் தம்மை வெளியேற்றிவிட்டு, துப்பாக்கியால் மனைவியை சுட்டுகொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.