காதலியை கர்ப்பமாக்கிய காதலன்! குழந்தை பிறந்ததும் எடுத்த அதிரடி முடிவு?

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை சேர்ந்தவர் ஹரி. இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே ராஜலெட்சுமி கர்ப்பமாகியுள்ளார்.

இதனை காரணம் காட்டிய ஹரியின் பெற்றோர்கள் அவர் மாற்றும் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும் கூறி கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை.

நிரைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலெட்சுமி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனையறிந்த ஹரி குழந்தையை காண சென்றுள்ளார்.

அப்போது குழந்தையை பார்த்து மனம்மாறிய ஹரி திருமணம் செய்ய உடனடியாக ஒப்புக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.

இதனை கண்ட மக்கள் கைதட்டி வாழ்த்தினர்.