10ஆம் வகுப்பு மாணவியை துஸ்பிரயோகம் செய்த காதலன், முன்னாள்காதலன், நண்பன் கைது

சமுக சீர்கேடு:செவனகல பிரதேசத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 3 பேர் நேற்று முன்தினம் செவனகல காவற்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் குறித்த மாணவியின் காதலர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் மாணவி கல்வி கற்கும் பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்றுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று மாணவி பாடசாலைக்கு சென்று பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவரின் காதலரான உயர் தர மாணவருடன் பாடசாலையில் இருந்து வௌியேறி பாழடைந்த வீடொன்றுக்கு சென்றுள்ளார்.

இதன்போது , குறித்த வீட்டிற்கு மாணவரின் இரு நண்பர்கள் வந்துள்ள நிலையில் , அவர்கள் மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை அவர்களின் கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளனர். பின்னர் , சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் மாணவியின் காதலரும் முன்னாள் காதலரும் அடங்குவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தற்போதைய நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் செவனகல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.