உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

படகு விபத்தில் பலி எண்ணிக்கை 137 ஆக உயர்வு

தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 137 ஆக அதிகரித்துள்ளது.  மேலும், மீட்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். மேலும், நான்கு நாட்கள் தேசிய துக்கதினமாக அனுசரிக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.