Trending News...

16 வயதுக்குள் 100 பேரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி.

16 வயதுக்குள் 100 பேரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு சிறுமி, 15 வயதில் தாயான பரிதாபம் பிரித்தானியாவில் அரங்கேறியுள்ளது.

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எட்டு ஆசியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு ஒன்றின்போது அவளது வாக்குமூலம் இடம்பெற்ற வீடியோ ஒன்று திரையிடப்பட்டது.

16 வயதுக்குள் அந்த சிறுமி 100 ஆண்களுக்கிடையே மாறி மாறி அனுப்பப்பட்டு, 100 முறை வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறாள்.

1998 முதல் 2001 வரை, அதாவது அவள் 13 வயதாக இருக்கும்போதிலிருந்து துஷ்பிரயோகிக்கப்பட்டிருக்கிறாள்.

உண்மையாகக் கூற வேண்டுமானால் எனது 16ஆவது வயதுக்குள் நான் 100 ஆசியர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அவர்களில் சிலரை மீண்டும் நான் பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார் அந்த சிறுமி.

Tanweer Ali (37), Mohammed Imran Ali Akhtar (37), Salah El-Hakam (39), Nabeel Kurshid (34), Iqlak Yousaf (34), Ajmal Rafiq (38), Asif Ali (33) மற்றும் பெயர் வெ
ளியிடப்படாத ஒருவர் உட்பட எட்டு பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணை தொடர்கிறது.