Trending News...

5 வருட காதலிக்காக யாழில் இளைஞன் செய்த செயல்

தான் காதலித்த பெண் நன்றாக வாழவேண்டும் என இளைஞன் ஒருவர் சிறப்புப் பூஜை ஒன்றை நடத்தி முதியோர் இல்லத்துக்கு உணவளித்து மகிழ்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் அவருடன் பாடசாலையில் ஒன்றாக படித்த பெண்ணை கடந்த 5 வருடமாக காதலித்து வந்த நிலையில் திடீரென பெண்ணின் வீட்டார் மாப்பிள்ளை பார்த்தவிட்டனர்.

இந்நிலையில் அந்த இளைஞரின் வீட்டு நிலையை கருத்தில் கொண்டும், அந்தப் பெண்ணின் வீட்டாரின் நிலையைக் கருத்தில் கொண்டும் தாங்கள் இருவரும் திருமணம் செய்ய முடியாத சூழல் உள்ளதால் பிரிந்து விடுவோம் என பெண் எடுத்துக் கூறியுள்ளார். அந்த இளைஞனும் உங்கள் விருப்பம் என சம்மதம் தெரிவிக்க ஒன்றாக முடிவெடுத்து பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில்தான் இன்று அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டிலுள்ள நபரோடு இந்தியாவில் திருமணம் நடைபெற்ற நிலையில், இளைஞர் அந்தப்பெண்ணின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என சிறப்பு பூஜை செய்ததுடன், முதியோர் இல்லத்துக்கு சென்று உணவளித்துள்ளார்.