இரு வைத்தியர்களின் தந்தையான ஆங்கில ஆசிரியர் விபத்தில் பலியானார்

மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வெள்ளிக்கிழமை (31) ஏற்ப்பட்ட விபத்தில் விக்னேஸ்வரா என்பவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டர் சைக்கிளில் பயணித்த நபரை சிறிய ரக வாகனம் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவற்குடாவைச் சேர்ந்த குறித்த நபர் ஒரு ஆங்கிலப்பாட ஆசிரியர் என தெரியவந்துள்ளது.மேலும் இவரது இரண்டு பிள்ளைகளும் வைத்தியர்கள் எனவும் மனைவி தாதிய உத்தியோகஸ்தராக பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

close