Trending News...

கொல்லப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை

தாக்கிக் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கம்பளை குருந்துவத்த பகுதியில் சிறுத்தையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா வனவள பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த உடல் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறு அடி நீளமான, 25 வயது மதிக்கத்தக்க குறித்த சிறுத்தையின் தலை வெட்டி கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கம்பளை நீதவானிடம் தெளிவுபடுத்தப்படவுள்ளதுடன், சிறுத்தையின் உடல் பரிசோதனைக்காக மிருக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.