Trending News...

வசூலில் புதிய சாதனைப் படைத்த சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள சீமராஜா திரைப்படம், மூன்று நாட்களில் மட்டும் ரூ.24.82 கோடி வசூல் செய்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில், விநாயகர் சதுர்த்தியன்று வெளியான திரைப்படம் ‘சீமராஜா’. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தால், படக்குழு மிகுந்த ஏமாற்றமடைந்தது. இருப்பினும், ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரைக்கு வருவதால், படம் வசூல் மழை பொழிந்து வருவதாக கூறப்படுகிறது.