உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மாணவிக்கு போனை வாங்கிக்கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன்.

தணமல்வில செவனகல பிரதேசத்தில் பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

செவனகல பிரதேசத்தில் விவசாய வேலைக்கு சென்றிருந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அதே பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவியே சந்தேக நபரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் சந்தேக நபர் முதலில் மாணவியை சந்தித்துள்ளார். இதன் பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். சந்தேக நபர், மாணவிக்கு செல்போன் ஒன்றை கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், சந்தேக நபர் மாணவியின் வீட்டுக்கு சென்று வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.