யாழ் மந்திரிமனையில் காதல் ஜோடி திருவிளையாடல்!! முதியவர் படுகாயம்!!

பருத்துறை வீதி நல்லூரில் உள்ள மந்திரி மனைக்குள் நின்ற காதல் ஜோடியை விரட்டியடித்த வயதான காவலாளி மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நல்லூர் மந்திரிமனைக்குள் கடந்த வாரம் இளைஞர் ஒருவரும், இளம் பெண் ஒருவரும் இருந்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞன் இளம் பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதனை அவதானித்த காவலாளி இருவரையும் அங்கிருந்து விரட்டியடித்துள்ளார்.

இதன் பின்னர் இன்று மத்தியம் 3 பேர் கொண்ட இளைஞர் குழு கம்பிகள், தடிகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி மந்திரிமனையின் காவலாளியை அழைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வயதான காவலாளி பாடுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் காவலாளி யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை மந்திரிமனைக்குள் இவ் வாறான சமூக பிறழ்வு நடத்தைகள் அவ்வப்போது நடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
close