உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

குடும்பத்தலைவர் மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல்!! வீடு உடைத்து கொள்ளை! நானாக்கள் இருவர் மாட்டினர்

கடந்த 13.09.18 அன்று இரவு  முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த குடும்பத்தலைவர் மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு வீட்டில் இருந்த பெறுமதியான நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் மாஞ்சோலை மருத்துவ மனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 14.09.18 அன்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள் இதன்போது இரண்டு இலட்சத்தி ஜம்பத்தி மூவாயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் இரண்டாயிரம் ரூபா பணம் என்பன இரண்டு கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கொள்ளையர்களை இனம் கண்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டபொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.எஸ்.பி.மயூரப்பெரேராவின் கட்டளைக்கு அமைவாக பெருங்குற்றத்தடுப்பு பொலீஸ் பொறுப்பதிகாரி ஜ.பி.கங்காநாத், மற்றும் பொலீஸ் உத்தியோகத்தர்களான டக்மல்,குமார,கருணாரத்ன,பார்த்தீபன் ஆகியோர் கொண்ட குழுவினர் முல்லைத்தீவு நகர் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்த போது கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் இரண்டு முஸ்லீம் நபர்களை கைதுசெய்து விசாரணை செய்தபோது அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் மன்னாரினை சேர்ந்த 32 அகவையுடை முஸ்லீம் நபர் முல்லைத்தீவில் திருமணம் செய்து வசித்து வருவதாகவும் இவருடன் 60 அகவையுடைய மற்றும் ஒரு மன்னாரினை சேர்ந்த முஸ்லீம் நபர் இணைந்தே இந்த கொள்ளையினை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என முல்லைத்தீவு பெருங்குற்றப்பிரிவுநிலைய பொறுப்பதிகாரி கங்காநாத் தெரிவித்துள்ளார்.

இவர்களை 15.09.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 25.09.18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.