முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய மாணவி

முல்லைத்தீவு - திருமுறிகண்டி, இந்துபுரம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருமுறிகண்டி, பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 09இல் கல்வி கற்கும் 14 வயதான முருகேசு அபிசாளினி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மாணவியின் சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.