உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சன்னி லியோனுக்கு வைக்கப்பட்ட ஹாட் மெழுகுச் சிலை

பிரபல நடிகை சன்னி லியோனுக்கு டெல்லி அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படங்கள் மற்றும் பார்ன் வீடியோக்கள் மூலமாக அகில உலக பிரபலமாக வலம் வரும் சன்னி லியோன், பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்த சன்னி லியோன் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் சன்னி லியோனை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது. மேலும் 2017-ம் ஆண்டு அதிகம் கூகுளில் தேடப்பட்ட நபரும் இவர்தான்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ஷாரூக்கான், கிரிக்கெட் வீரர் விராத் கோலி ஆகியோருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.