உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பெண்கள் கவர்ச்சியாக செல்ஃபி எடுக்க காரணம் என்ன? பின்னாலிருக்கும் திடுக்கிடும் காரணம்

இது ஸ்மார்ட்போன் உலகம். உலகமே உள்ளங்கையில் என்று தான் சொல்லவேண்டும். செல்ஃபி எடுக்கும் கலாச்சாரம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகியிருக்கிறது. சுற்றுலாவுக்குச் சென்றால், அங்குள்ள இயற்கையை ரசிப்பதை மறந்து பலரும் செல்ஃபி எடுத்து சமூகவலைதளங்கில் பதிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். தன் வாழ்வில் நடக்கும் சின்னச்சின்னத் தருணங்களைக்கூட சமூக ஊடகங்களில் பதிவுசெய்து, `லைக்’ களை பெறுவதற்காக செல்ஃபி எடுக்கிறார்கள்.

பெண்கள் பலர் கவர்ச்சியாக செல்ஃபிகளை எடுத்து சமூக வலைதளங்களில் பகிரும் போக்கு அதிகமாகியுள்ளது. பெண்கள் கவர்ச்சியாக செல்ஃபி எடுப்பது ஏன் என்ற காரணத்தைக் கண்டுபிடிக்க சிட்னி பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றைச் செய்தார்கள். 113 நாடுகளில் சமூக ஊடக பதிவுகளை பகுப்பாய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எல்லா மட்டங்களிலும் உண்டு. மக்கள் மத்தியில் போட்டி அதிகரித்துள்ளது. சமூகத்தில் தன் நிலை என்ன என்பது குறித்தான பயமும் மக்களிடையே கூடியுள்ளது. சமூகத்தில் தனக்கான உயர்ந்த இடத்தை தக்கவைப்பதற்காகவும், பிறரை விட சிறப்பாக செயல்படுகிறேன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தவும் மக்கள் விரும்புகின்றனர்.

கவர்ச்சியாக செல்ஃபி எடுப்பதற்கு வருமான சமநிலையின்மை ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. ஒரு பெண், தன் அலுவலகத்தில் பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெறுவதற்கும், சக பெண் ஊழியர்களைவிட முன்னேறிச் செல்லவும், பெண்கள் செல்ஃபி எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கவர்ச்சியான செல்ஃபியை சமூக ஊடகத்தில் பதிவிடும் போக்கு சரியா தவறா என்கிறவாதம்  முக்கியமல்ல. இந்த கவர்ச்சி செல்ஃபி, பொருளாதார ரீதியாகவோ, தனிப்பட்ட தொடர்பினாலோ பெண்களுக்கு சில நன்மைகளும் கிடைக்கின்றன என்கிறது ஆய்வு முடிவு.

கவர்ச்சிகரமான செல்ஃபியை இணையத்தில் பகிர்வது என்பது, மற்றவர்களுக்கு முன்னாள் தன்னை சிறப்பாகக் காட்டிக்கொள்ள தனிமனிதர்கள் செய்யும் செலவுகளுக்கு இணையானது.

பிகினி உடையுடன் ஒரு பெண் செல்ஃபி எடுத்தால், அவர் மனநலம் பாதிக்கப்படவள் என்று நினைக்காதீர்கள். சிக்கலான சமூக, பரிணாமத்தில், அவள் தனக்கான இடத்தை பொருளாதார ரீதியாக தக்க வைத்துக்கொள்ள புத்திசாலித்தனமாக செயல்படுகிறாள் என்று அர்த்தம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.